கடலூரில் கரோனா நோய் தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த வாரிசுதார ருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன் வழங்கினார். 
Regional01

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் - கடலூரில் நலத்திட்ட உதவிகள் :

செய்திப்பிரிவு

முதல்வரின் பொது நிவாரணம் நிதி மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கடலூரில் பயனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வழங்கினார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், கரோனாநோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோரில் ஒருவரை இழந்த 14 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் ரூ.42 இலட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து, இலவச தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 44 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன் மற்றும் அரசு அலுவலர்கள, பயனாளிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT