மதுரை மாவட்ட நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கு 21 அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்ட நீதிமன்ற தலைமை அரசு வழக்கறிஞராக (குற்றவியல் வழக்குகள்) எம்.ஏ.பழனிச்சாமி, தலைமை அரசு வழக்கறிஞராக (உரிமை யியல்) வி.எழிலரசன், மதுரை கூடுதல் அமர்வு இசி மற்றும் என்டிபிசி நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக (ஜாமீன் வழக் குகள்) பி.தங்கேஸ்வரன், முத லாவது என்டிபிஎஸ் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக கே.விஜயபாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை 5-வது கூடுதல் மா வட்ட நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக ஜெ.ஜவஹர், கரூர், விருதுநகர், கன்னி யாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான டான்பிட் நீதிமன்ற சிறப்பு அரசு வழக் றிஞராக (குற்றவியல்) ராஜேஷ் கண்ணன், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி மாவட்டங் களுக்கான டான்பிட் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.ஐ.முகமது இஸ்மாயில், மதுரை டான்பிட் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக (உரிமையியல்) எம்.தரன், மதுரை உதவி அமர்வு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக எம்.மகேஷ்குரு, மகளிர் நீதிமன்ற முதலாவது சிறப்பு அரசு வழக்கறிஞராக சி.லதா சாந்தி, 2-வதுசிறப்பு அரசு வழக்கறிஞராக ஜெ.காவேரிசாந்தி.
மேலூர் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக கே.சபாபதி, உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ஆர்.ராஜசேகர், வாடிப்பட்டி மாவட்ட முன்சீப் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடுவர் மன்ற அரசு வழக்கறிஞராக டி.பார்த்தசாரதி, திருமங்கலம் சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக டி.தங்கசாமி, திருமங்கலம் மாவட்ட முன்சீப் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக சி.விஜய், பேரையூர் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் மன்ற அரசு வழக்கறிஞராக ஜி.மதன்குமார், மேலூர் மாவட்ட முன்சீப் நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக ஏ.சேகர், மதுரை கூடுதல் அமர்வு இசி மற்றும் இரண்டாவது என்டிபிஎஸ் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக எம்.சுரேந்திரன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞராக கே.எஸ்.முரளி, கனிமவள வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக கே.சிவகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 3 ஆண்டு காலத்துக்கு அரசு வழக்கறிஞர்களாக நியமிக் கப்பட்டுள்ளனர். 60 வயது வரை பணியில் நீடிப்பார்கள். 60 வயதானதும் பணிக்காலம் காலாவதியாகிவிடும்.
புதிய அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் பழனிச்சாமி, எழிலரசன், தங்கசாமி ஆகியோருக்கு வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.