Regional01

சத்தி அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

சத்தியமங்கலத்தில் சாராயம் காய்ச்சிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் புதுவடவள்ளி அடுத்த ராஜீவ் நகரில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக சத்தியமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று வீடு, வீடாக சோதனை நடத்தினர்.

அங்குள்ள ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சுவது கண்டறியப்பட்டு, 50 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த வீட்டில் இருந்த மலர்க்கொடி (40), மகேந்திரன் (45) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT