ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் 24-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடக்கிறது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்கலாம். கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கலாம், என ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.