Regional01

கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது 2 பேரல் ஊறல் அழிப்பு :

செய்திப்பிரிவு

பரமத்தி அருகே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பரமத்தி அருகே திருமணிமுத்தாறு பாலத்தின் கீழ் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளர் பூர்ணிமா தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு 13 லிட்டர் சாராயம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், 2 பேரல் சாராய ஊறல் இருந்துள்ளது. அவற்றை பறிமுதல் செய்து அழித்த காவல் துறையினர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட கந்தசாமி (63), கார்த்திகேயன் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT