Regional01

தறி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் :

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் அசோகன் தலைமைவகித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கந்துவட்டிக் கொடுமை மற்றும் கடன் கொடுத்தவர்களின் பாலியல் மிரட்டல் காரணமாக திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுப்பிரமணியம், மேனகா தம்பதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி தற்கொலை செய்து கொண்டனர். பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம்-மேனகா குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

திம்மராவுத்தம்பட்டியில் இட வாடகை நிலுவை காரணமாக வேறு நபருக்கு விசைத்தறிகளை கட்டிட உரிமையாளர் வாடகைக்கு விட்டுள்ளார். இதனை மீட்டு சம்பந்தப்பட்ட விசைத்தறி உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும், என்பதுள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிதரப் போாட்டம் நடைபெறுகிறது.உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும், என்றார்.

SCROLL FOR NEXT