வாழப்பாடி அருகே முன்னால் சென்ற லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில், 13 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து சேலத்துக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து நேற்று அதிகாலை 6.30 மணியளவில் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற அரிசி பாரம் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதியது. இதில், லாரி சாலையோரம் குப்புற கவிழ்ந்தது.
மேலும், லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உள்ளிட்ட 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக
வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.