Regional01

சங்கரன்கோவில் நூலகத்தில் 27 புரவலர்கள் சேர்ப்பு :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கிளை நூலகத்தில் புதிய புரவலர்கள் இணைப்பு விழா நடந்தது.

மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். நூலகர் முருகன் முன்னிலை வகித்தார். நூலகர் சண்முகவேல் வரவேற்று பேசினார்.

விழாவில் ஒரே நாளில் புதிதாக 27 புரவலர்கள் சேர்க்கப்பட்டனர். நூலகர்கள் சிவகுமார், ரவி மற்றும் ரமேஷ், மாரியப்பன், வாசகர் வட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT