தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 'மீன் புகைபதன தொழில்நுட்பம் மற்றும் மாசி மீன் தயாரிப்பு' குறித்த தொழில்நுட்ப செயல்விளக்க பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) ந.வ.சுஜாத்குமார் பயிற்சியை தொடங்கி வைத்தார்.
மீன்பதன தொழில் நுட்பத்துறை தலைவர் பா.கணேசன்வரவேற்றார். தூத்துக்குடி திருச்சிலுவை மனையியல் கல்லூரி உதவி பேராசிரியை கரோலின் மீனில் உள்ள ஊட்டச்சத்து அம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார். 50 பேர் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர். தமிழ்நாடு மீன்வளபல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பா.ஜவஹர் பயிற்சியில் பங் கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.