தலைவாசல் வட்டாட்சியர் அலவலகம் கட்டுவதற்கு, போக்குவரத்து வசதியுள்ள தலைவாசல் ஊராட்சிப் பகுதியிலேயே இடம் தேர்வு செய்ய வலியுறுத்தி சேலம் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஊராட்சித் தலைவர் உள்ளிட்டோர். 
Regional02

புதிதாக உருவான தலைவாசல் வட்டாரத்துக்கு - போக்குவரத்து வசதியுள்ள இடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் கட்ட கோரிக்கை :

செய்திப்பிரிவு

தலைவாசல் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு, போக்குவரத்து வசதியுள்ள, தலைவாசல் ஊராட்சிப் பகுதியிலேயே இடம் தேர்வு செய்ய வேண்டும், என்று வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊராட்சித் தலைவர் கூட்டமைப்பு சார்பில், தலைவாசல் ஊராட்சித் தலைவர் ஆறுமுகம், ஐக்கிய விவசாயிகள் சங்க துணைத் தலைவர் சங்கரய்யா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட தலைவாசல் வட்டாரத்துக்கு, புதிய அலுவலகம் கட்டுவதற்கு, தேவியாக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த இடம் பேருந்துகள் நின்று செல்லாத இடமாகவும், இரு சக்கர வாகனங்களில் சென்று வருபவர்கள், சாலையில் வாகனங்களின் திசைக்கு எதிராக பயணித்து வர வேண்டிய, விபத்து அபாயம் நிறைந்த இடத்தில் உள்ளது.

தலைவாசலில், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம், ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள மேய்ச்சல் நிலம், தலைவாசல் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில், போதிய நிலப்பரப்பு உள்ளது. இந்த இடங்கள் போக்குவரத்து வசதியுடன், மக்கள் விபத்து அபாயமின்றி வந்து செல்லவும் ஏற்றது என்பதால், இவற்றில் ஒரு இடத்தை அரசு பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT