Regional03

தொழிற்சாலையில் விபத்து; பிஹார் இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

ஈரோட்டில் தனியார் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி காயமடைந்த பிஹார் மாநில இளைஞர் உயிரிழந்தார்.

பிஹார் மாநிலம் அலகாபாத் மாவட்டம் ஓபியூர் பகுதியைச் சேர்ந்தவர் உபேந்திர ராஜ்வான்ஷி (27). ஈரோட்டில் கடந்த இரண்டு வருடங்களாகத் தங்கி, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை பணியில் இருந்த போது,அவரது கை இயந்திரத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கருங்கல்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT