Regional02

கணவன், மனைவி தனித்தனியே கவுன்சிலர் பதவிக்கு மனுத்தாக்கல் :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் களைகட்டியுள்ளது. அரசியல் கட்சியினர் கடந்த சில தினங்களாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய 15- வது வார்டில் செஞ்சி திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதேபோல் செஞ்சி ஒன்றிய 5-வது வார்டில் போட்டியிடும் விஜயகுமாரின் மனைவி செண்பக ப்ரியா விஜயகுமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியனிடமும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் விஜயராகவன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அஞ் சாஞ்சேரி கணேசன், அரங்க ஏழுமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT