Regional02

பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி பூபால்ராயர்பு ரம் பகுதியை சேர்ந்த முருகன் மனைவி ஆவுடை யாச்சி (42). அந்த பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் இவர், தொழில் மேம்பாட்டுக்காக அதே பகுதியை சேர்ந்தப.தெரசையா (62) என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கந்துவட்டி கேட்டு தெரசையா மிரட்டுவதாக ஆவுடையாச்சி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸார் விசாரணை நடத்தி தெரசையாவை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத் தில் கந்து வட்டிக்கு கடன் கொடுத்து பணம் வசூலிப்பவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கபடுவார்கள் என எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT