திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

பெட்ரோல் விலை உயர்வு, வேளாண் சட்டங்களைக் கண்டித்து - திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கும் முடிவு போன்றவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மகாராஜ நகரிலுள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் மு.அப்துல்வகாப் எம்எல்ஏ தலைமை வகித்தார். கைலாசபுரத்திலுள்ள தளபதி படிப்பகம் முன் மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள் தலைமையிலும், வி.எம். சத்திரத்தில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், தாழையூத்தில் கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுபோல காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையிலும், மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி, தமுமுக சார்பில் மாவட்ட தலைவர் ரசூல்மைதீன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி

தூத்துக்குடி

மதிமுக சார்பில் தூத்துக்குடி கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட அவைத் தலைவர் தர்மர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா ஆகியோரது வீட்டு முன்புஅவர்களது தலைமையிலும், எட்டயபுரத்தில் நகர திமுக செயலாளர் பாரதி கணேசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் நகர திமுக செயலாளர் கருணாநிதி, ஒன்றிய அலுவலகம் முன்புதிமுக செயலாளர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி காந்தி மண்டபம் முன்பு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ், மதிமுக மாவட்ட அலுவலகம் முன்பு வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்

SCROLL FOR NEXT