Regional02

மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று கறுப்புக்கொடி போராட்டம் : அமைச்சர் அறிக்கை

செய்திப்பிரிவு

பாஜக அரசைக் கண்டித்து இன்று (செப்.20) நடைபெறும் கறுப்புக்கொடி போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மக்கள் விரோத, ஜனநாயக விரோத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு தொடருவது, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது உள்ளிட்ட மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும் இன்று காலை 10 மணிக்கு கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளும் அவரவர் இல்லம் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அவரவர் இல்லம் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT