ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 2002 முதல் பதிவுசெய்து 18 வயதான பெண் குழந்தைகளுக்கு முதிர்வுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பயனாளிகளின் வைப்புத் தொகை ரசீது, பெண் குழந் தைகளின் மாற்றுச்சான்று, மதிப் பெண் பட்டியல், தாயார் மற்றும் குழந்தைகளின் ஆதார் நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் பயனாளிகளின் பெயரில் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய வற்றுடன், சமூகநல விரிவாக்க அலுவலர்களை அணுகலாம்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.