Regional02

அரியலூர், நாகை மாவட்டங்களில் - போக்ஸோவில் இளைஞர், மீனவர் கைது :

செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டம் அயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய்(35). இவர், சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கீழப்பழுவூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமராவை சரி செய்ய அண்மையில் சென்ற விஜய், அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்டு வந்த கீழப்பழுவூர் போலீஸார், விஜயை நேற்று முன்தினம் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செருதூர் மீனவ கிராமம் சிங்காரவேலவர் நகரைச் சேர்ந்தவர் ஞானவேல்(36), மீனவர். இவர் 13 வயது சிறுமிக்கு அண்மையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக, நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஞானவேலை நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT