Regional04

சேலம் மாநகரில் 128 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

செய்திப்பிரிவு

கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமையொட்டி, சேலம் மாநகரில் 128 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பூசி மெகா முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 128 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களிலும், மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து, தடுப்பூசி சீட்டு வழங்குகின்றனர். அதைக்கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT