Regional02

தடய அறிவியல் துறை துணை இயக்குநருக்கு அண்ணா பதக்கம் :

செய்திப்பிரிவு

தடய அறிவியல் துறை துணை இயக்குருக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காவல்துறை, சிறைத்துறை, ஊர்காவல்படை, தடய அறிவியல் துறை போன்றதுறைகளில் பணியாற்றுபவர்க ளுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநா ளன்று முதல்வரின் பதக்கங்கள்அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றி தற்போது துணை இயக்குநராக பணியாற்றும் சண்முகத்திற்கு சிறப்பாக பணியாற்றியதற் காக அண்ணா பதக்கம் மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பரிசை அரசு அறிவித்துள்ளது.

இவ்விருது பெற உள்ள சண்முகம் செஞ்சி அருகே நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT