Regional02

பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி முகக்கவசம் வழங்கிய பாஜகவினர் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் நகர் பாஜக சார்பில் அரண்மனை முன் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மருத்துவர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். பாஜக நகர் தலைவர் வீரபாகு முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொதுச் செயலாளர் குமார், மீனவர் அணி மாநிலச் செயலாளர் நம்புராஜன், மாவட்ட துணைத் தலைவர் விஜயராணி, மாவட்டச் செயலாளர் மணிமாறன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT