Regional02

சிவகங்கையில் சட்ட கல்லூரி அமைக்க வேண்டும் : வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம்

செய்திப்பிரிவு

சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிவகங்கையில் சட்டக் கல்லூரி அமைக்க முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர், சட்டக் கல்லூரி இயக்குநரிடம் கோரிக்கை மனு அளிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT