Regional01

சேந்தமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி :

செய்திப்பிரிவு

சேந்தமங்கலத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசினார்.

விழாவில், 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல் அணிவிக்கப்பட்டது. மேலும், வளையல், மஞ்சள், இனிப்பு வகைகள் கர்ப்பகால பராமரிப்பு புத்தகம் மற்றும் 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது.

விழாவில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் வி.ஜான்சிராணி, குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ஜி.டி.மாலதி, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அபிராமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படம் உள்ளது.

சேந்தமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவித்தார்.

SCROLL FOR NEXT