திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் முதல் சாகுபடி செய்யப்படும் நெல் II, மக்காச்சோளம் II மற்றும் பருத்தி II பயிர்களுக்கு தற்பொழுது விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். நடப்பு வருடம் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நெல் II (சம்பா) பயிருக்கு ஏக்கருக்கு ரூ.519-ஐ நவம்பர் 15-ம் தேதி வரை செலுத்தலாம். மக்காச்சோளம் II மற்றும் பருத்தி II பயிர்களுக்கு முறையே ரூ.416, ரூ.642 அக்டோபர் 31-ம் தேதி வரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம்.
விவசாயிகள் அடங்கல், நில உரிமை பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகக்துடன் உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.