Regional03

ரயிலில் கடத்த முயன்ற 30 கிலோ குட்கா பறிமுதல்வடமாநில இளைஞர் கைது :

செய்திப்பிரிவு

சேலம் வழியாக ரயிலில் கடத்த முயன்ற 30 கிலோ குட்காவை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநில இளைஞரை கைது செய்தனர்.

சேலம் ரயில்வே போலீஸார் மும்பையில் இருந்து கேரளா செல்லும் குர்லா விரைவு ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்தவரின் கையில் இருந்த இரு பைகளை சோதனை செய்தனர்.

இதில், 30 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், ராஜஸ்தான் மாநிலம் மத்தியசிரேசி பகுதியைச் சேர்ந்த ஜம்புசிங் (30) என்பதும் திருப்பூர், அவிநாசியில் வசித்து வரும் அவர் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி பவானி, அவிநாசி பகுதியில் விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT