Regional02

சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் வளாக நேர்காணல் :

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சித் துறை, டிவிஎஸ் குழும நிறுவனங்கள் இணைந்து ஐசிஐசிஐ வங்கி நிறுவனத்துக்காக நாளை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம், பி.பி.ஏ., பி.பி.எம்., உள்ளிட்ட அனைத்துப் பாடங்களிலும் பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் இதில் பங்கு பெறலாம்.

வயது உச்சவரம்பு 25. நேர்காணலில் பங்குபெறுவோர் தங்கள் பயோடேட்டா, புகைப்படம் ஆகியவற்றுடன் நாளை காலை 9 மணிக்கு கல்லூரியில் பெயர் பதிவு செய்ய வேண்டும்.

ரூ. 1.6 லட்சம் ஊதியம்

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் எம். முஹம்மது சாதிக், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஒருங்கிணைப்பாளர் மு.இ. ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் செய்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு 98403 79167 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

SCROLL FOR NEXT