Regional02

ஓய்வூதியர்கள் சங்க விழா :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர்கள் சங்க 21-ம் ஆண்டு தொடக்க விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பி.டி.சிதம்பரம் தலைமை வகித்தார். மதுரை மருத்துவக் கல்லூரி நுண்ணுயிரியல் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் என். பழனியப்பன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஏ. ராசகிளி இறை வணக்கம் பாடினார். சங்கத்தின் செயலர் ஆறுமுகம் வரவேற்றார்.

தமிழ்நாடு ஓய்வூதிய சங்கத்தின் துணைத் தலைவர் சீதாராமன், அனைத்து மத்திய மாநில சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சண்முக சுந்தர ராஜா, திருநெல்வேலி மாவட்ட பணி நிறைவு பெற்ற வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் முத்துசாமி ஆகியோர் உரையாற்றினர்.

SCROLL FOR NEXT