Regional01

திமுக- பாஜகவினர் இடையே தகராறு :

செய்திப்பிரிவு

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக அமைப்பு சாரா தொழிலாளர் அணி சார்பில், வெங்கமேட்டில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதே இடத்தில் மத்திய மாவட்ட திமுகவின் ஆட்டோ தொழிலாளர் முன்னேற்ற சங்கம்சார்பில், பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கட்சி கொடிக்கம்பம் அமைப்பதில் இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால், அனுப்பர்பாளையம் போலீஸார் சம்பவஇடத்துக்கு வந்து, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். அதேபகுதியில் வெவ்வேறு இடங்களில் இருதரப்பினரின் கட்சி கொடிக்கம்பம் அமைக்க போலீஸார் ஏற்பாடு செய்ததால், இரு தரப்பினரும் சமாதானமடைந்தனர்.

SCROLL FOR NEXT