கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர். படம்: ஜெ.மனோகரன் 
Regional02

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை : இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

மஹாராஷ்டிரா மாநிலம் பீமா கொரேகான் என்ற இடத்தில், கடந்த 2017-ம் ஆண்டு போராட்டம் நடத்திய தலித் இயக்கத்தினர் மற்றம் மனித உரிமை அமைப்பினர் மீது, வன்முறையை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதில், கைதான பாதிரியார் ஸ்டேன்ஸ் சாமி மும்பை சிறையில் உயிரிழந்தார். இதையடுத்து, வழக்குகளை திரும்பப்பெற்று, கைதான அனைவரையும் விடுவிக்க கோரி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில், கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை வகித்தார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அ.அஷ்ரப் அலி, மாநில பொருளாளர் வழக்கறிஞர் கே.சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் பி.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT