Regional03

அவதூறு சுவரொட்டி ஒட்டிய இருவர் கைது :

செய்திப்பிரிவு

கோவை காந்திபுரம், டாடாபாத் உள்ளிட்ட இடங்களில், பெரியார் குறித்து அவதூறாக வாசகங்களை அச்சிட்டு சுவரொட்டி ஒட்டப்படுவதாக காட்டூர் போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று சுவரொட்டி ஒட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். அவர், தனக்கு எழுத படிக்கத் தெரியாது. கூலிக்காக சுவரொட்டி ஒட்ட வந்தேன். பாரத்சேனாவைச் சேர்ந்த இருவர் ஒட்ட அனுப்பியதாக தெரிவித்தார். இதையடுத்து. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிந்து, பாரத்சேனா இயக்கத்தின் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன்(30), உறுப்பினர் தமிழரசன்(31) ஆகியோரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT