கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி முன்னாள் ஒன்றியக் கவுன்சிலரான முரளியின் ஆதரவாளர்கள். 
Regional02

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் - வேட்பாளர் தேர்வில் பாரபட்சம் திமுகவினர் சாலை மறியல் :

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுகவில் வேட்பாளரை தேர்வு செய்வதில் இரு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஒருபிரிவினர் நேற்று சாலை மறியலில் ஈடு பட்டனர்.

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றி யம் கோட்டலம் கவுன்சிலர் பதவிபொது பெண் இடமாக மாற்றப் பட்டுள்ளது. இப்பதவிக்கு கள்ளக்குறிச்சி கோட்டலத்தைச் சேர்ந்தமுரளி மனைவி ரூபா, செல்வராஜ் மனைவி கவுரி ஆகிய இருவரும்சீட் கேட்டுள்ளனர். இதில் முரளிஎன்பவர் பொன்முடி ஆதரவாள ராகவும், கவுரிசெல்வராஜ் மாவட்டப் பொறுப்பாளரான வசந்தம்கார்த்திக்கேயனின் ஆதரவாளரா கவும் செயல்படுவதாக கூறப்படுகி றது.

இதனால் பொன்முடி ஆதரவா ளர்களை புறக்கணிக்கவேண்டும் என்ற நோக்கில் மாவட்டப் பொறுப்பாளர்களான வசந்தம் கார்த்திக் கேயனும், உதயசூரியனும் செயல் படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்நிலையில், வசந்தம் கார்த்திக்கேயனின் ஆதரவாளரான செல்வராஜின் மனைவி கவுரி பரிந்துரைக்கப்பட்டார். இதனை அறிந்த, பொன்முடியின் ஆதரவாள ரான முரளியின் மனைவி நேற்று தனது ஆதரவாளர்களுடன் கள்ளக்குறிச்சி சாலையில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர். வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திமுகவினரிடம் பலத்த கோஷ்டி மோதல் எழுந்திருக்கும் நிலையில், கூட்டணிக் கட்சியினர் எவ்வாறு சீட் பங்கீடு செய்வது என கையை பிசைந்தவண்ணம் உள்ளனர்.

SCROLL FOR NEXT