Regional01

முக்தீஸ்வரர் கோயிலில் சூரிய கதிர் பிரவேசம் :

செய்திப்பிரிவு

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ் வரர் கோயிலில் நாளை முதல் 12 நாட்கள் சூரிய கதிர் பிரவேசம் நடைபெறும்.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் செப்.19 முதல் 30-ம் தேதி வரை காலை 6.15 மணி முதல் 6.25 மணி வரை மற்றும் காலை 6.40 மணிமுதல் 6.50 மணி வரை சுவாமி சன்னதி மண்டபத்தின் துவாரம் வழியாக கருவறைக்குள் முக்தீஸ்வரர் சுவாமி மீது சூரிய கதிர்கள் பிரவேசிக்கும் காட்சியை தரி சிக்கலாம்.

அப்போது சிறப்பு அபி ஷேகம், தீபாராதனை நடை பெறும்.

செப்.19, 24, 25, 26 ஆகிய தினங்களில் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் கோயிலுக்குள் அனு மதிக்கப்பட மாட்டார்கள். இதர நாட்களில் காலை 6 மணிக்கு பின்னர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரி வித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆபூர்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசிப்பர்.

SCROLL FOR NEXT