ஏற்காட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து நேற்று மாலை ஒரு வேனில் சினிமா சூட்டிங்கிற்குத் தேவையான பொருட்களுடன் 11 பேர் வந்து கொண்டிருந்தனர். ஏற்காடு கெலாக்காடு பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சென்னையைச் சேர்ந்த பாண்டியன், தேனியைச் சேர்ந்த சஞ்சய் இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 9 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.