Regional02

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு உறுதிபூண்டுள்ள மக்கள்: ஆர்.காமராஜ் எம்எல்ஏ :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் மன்னார்குடியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பாப்பா சுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், ஒன்றியக்குழுத் தலைவர் மனோகரன், நகரச் செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், ஆர்.காமராஜ் எம்எல்ஏ பேசியது:

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தலைமையில் நடைபெற்ற நல்லாட்சியை மீண்டும் நினைவுபடுத்திவரும் மக்கள், அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அளிக்காமல் தவறிழைத்துவிட்டதாக கருதுகின்றனர். இதற்கு ஈடாக, வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உறுதிபூண்டுள்ளனர். எனவே, அதிமுகவின் மக்கள் நலப் பணியை எடுத்துக்கூறி, திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள இடங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற களப்பணியாற்ற வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT