Regional03

இடஒதுக்கீட்டுக்காக உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி :

செய்திப்பிரிவு

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உயிர்நீத்த 21 பேரின் படங்களுக்கு, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே பாமக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று வீரவணக்கம் செலுத்தி, மலர் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், மாநில துணைத் தலைவர்கள் செந்தில்குமார், கண்ணபிரான், சமூகநீதி பேரவை வழக்கறிஞர் தங்கதுரை, மாநில மாணவரணிச் செயலாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற, இடஒதுக்கீடுக்காக போராடி உயிர் நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்க மாநில பொதுச் செயலாளர் வைத்தி தலைமை வகித்தார். பாமக மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் அசோகன், ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ரவி, நக்கீரன், வன்னியர் சங்க நகரச் செயலாளர் மாதவன்தேவா, நகரத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர், உயிர் நீத்தோரின் படங்களுக்கு மலர்தூவி, அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT