Regional03

18 பிடியாணை நிலுவை: இளைஞர் சிக்கினார் :

செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் நிலு வையிலுள்ள பிடியாணை (பிடிவாரண்ட்) தொடர்பு டைய நபர்களைப் பிடிக்க எஸ்.பி பா.மூர்த்தி உத்த ரவின்பேரில் தனிப்படை கள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில், 18 பிடியாணைகள் நிலுவையிலுள்ள கம்பரசம் பேட்டை பெரியார் நகரைச் சேர்ந்த சுகுமார் மகன் சுதாகர்(27) என்பவர் குறித்து டிஎஸ்பி முத்தரசு தலைமை யிலான தனிப்படையினர் விசாரித்தபோது, கீழ அல்லூ ரில் உள்ள உறவினர் வீட்டில் சுதாகர் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவரை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மடக்கிப் பிடித்தனர்.

மேலும், அவருடன் தங்கியிருந்த கரூர் மாவட்ட த்தைச் சேர்ந்த மேலும் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சிறப்பாக செயல்பட்ட டிஎஸ்பி முத்தரசு தலைமையிலான தனிப்படையினரை எஸ்.பி பா.மூர்த்தி பாராட்டினார்.

சுதாகர் மீது திருச்சி மாவட்டத்தில் 26 வழக்கு களும், திருச்சி மாநகரில் 2 வழக்குகளும், கரூர் மாவட்டத்தில ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT