திருநெல்வேலி இ.எஸ்.ஐ.சி. மண்டல துணை இயக்குநர் எஸ். கிருஷ்ணகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா தொற்றால் இறந்தவர் களின் குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதற்காக, கரோனா நிவாரண திட்டத்தை இஎஸ்ஐசி அறிமுகப்படுத்தி யிருக்கிறது. அதன்படி, இஎஸ்ஐசி-யில் காப்பீடு செய்யப்பட்ட நபர்கள் கரோனாவால் உயிரிழந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 90 சதவீதம் சராசரி ஊதியம் நிவாரணமாக மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டம் வரும் 2022 மார்ச் 23-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இதுவரை கரோனாவால் உயிரிழந்த 28 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண திட்டத்தின்கீழ் மாதாந்திர ஓய்வூதிய தொகையாக ரூ.10 லட்சம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடல் பீமித் வியக்தி கல்யாண் யோஜனா திட்டத்தில் கரோனாவால் ஒருவர் வேலையை இழந்தால் நிவாரணம் அளிக்கப்படுகிறது. அதன்படி சராசரி மாத ஊதியத்தில் 50 சதவீதம் மூன்று மாதங்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை மட்டும் வழங்கப்படும். இத்திட்டம் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.