தூத்துக்குடியில் தந்தை பெரியார்பிறந்தநாளை முன்னிட்டு வடக்குமாவட்ட திமுக சார்பில் பொதுக்குழுஉறுப்பினர் ஜெகன் பெரியசாமிதலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மகளிர்அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதிமுகவினர் அவைத்தலைவர் தர்மம் தலைமையில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் மாரிசெல்வம், ஆதித்தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்வேலன், திராவிடர் கழகம் சார்பில் பால் ராஜேந்திரன், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பால்.பிரபாகரன், தமிழ்புலிகள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தாஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணிசார்பில் காசி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருநெல்வேலி