Regional03

மது போதையில் பெண் கொலை :

செய்திப்பிரிவு

கண்டாச்சிபுரம் டாஸ்மாக் கடை யில் நேற்று முன்தினம் மாலை காரணை கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம், ரங்கநாதன், குட்டி என்கிற தனசேகர்ஆகியோர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது நாராயணனுக் கும், மாணிக்கத்திற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு, கைக லப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மாணிக்கம் (55),மணிகண்டன் (20), முருகன் (55)அவரது மகன் அஞ்சாமணி (20)ஆகியோர் ஒன்று சேர்ந்து நள்ளிரவில் நாராயணன் வீட்டிற்கு சென்று அவரை தாக்கினர். தடுக்க வந்த அவரது மனைவி லட்சுமி (35) என்பவரை தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

கண்டாச்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். தப்பியோடிய மற்ற 3 பேரை தேடிவருகின்றனர்.

SCROLL FOR NEXT