ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் கட்சி அலுவலகத்தில் பாமகவினர் விருப்பமனு தாக்கல் செய்தனர். 
Regional03

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு விருப்ப மனு பெறும் பாமக :

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.

அந்தவகையில் இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடும் பாமக நேற்று முன்தினம் முதல் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் உள்ள மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் அலுவலகத்தில்நேற்று மாநில துணைப் பொதுச் செயலாளரான எம்எல்ஏ சிவகுமார், மாவட்ட செயலாளரிடம் ஜெயகுமார், சங்கர் உள்ளிட்ட பாமகவினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

SCROLL FOR NEXT