Regional02

அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு :

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச ஓசோன் அடுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.

தலைமைஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். பசுமைப் போர்வை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசோன் குறித்து ஆசிரியர் கருப்பையா விளக்கினார். மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT