Regional01

சத்தியில் நாட்டுவெடிகுண்டு வைத்திருந்த 2 பேர் கைது :

செய்திப்பிரிவு

சத்தியமங்கலத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டுகளை வைத்திருந்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சத்தியமங்கலத்தை அடுத்த கொண்டப்பநாயக்கன் பாளையம் பகுதியில் போலீஸார் ரோந்து சென்றபோது, சந்தேகம்படும்படி சுற்றித் திரிந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் கொண்டப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மகேஷ்வரன் (36), சம்பத்குமார் (52) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 12 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 50 கிராம் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது. வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வெடிவைத்து பிடிக்க இவற்றை தயார் செய்து வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT