Regional01

இளைஞர் கொலை :

செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டது தொடர்பான தகராறில், பட்டதாரி இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

வாசுதேவநல்லூர் அருகே யுள்ள ராமபுரம் மாடசாமி கோயில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் விஜய் கணேசன் (21), பி.ஏ. பட்டதாரி. சிவகிரி அருகே கூடலூர் மொட்டமலை பகுதியில் நேற்று இவர் கத்திக் குத்து காயங்களுடன் இறந்துகிடந்தார். வாசுதேவநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

விஜய் கணேசன் தனது நண்பர் முத்துகிருஷ்ணன் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் கடனாக கொடுத்திருந்தார். பணத்தை திருப்பி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

முத்து கிருஷ்ணனின் செல்போனை விஜய் கணேசன் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தில் விஜய் கணேசன் கொலை செய்யப் பட்டது தெரியவந்தது. கொலை தொடர்பாக முத்துகிருஷ்ணன், அவரது நண்பர்கள் கோபி ஆனந்த், மகேந்திரன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT