Regional02

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

அஞ்சல் துறையில் சேமிப்பு புதிய கணக்குகள் தொடங்க வரைமுறையற்ற இலக்கை நிர்ணயம் செய்யும் அஞ்சல் துறை அதிகாரிகளை கண்டித்து தூத்துக்குடி கோட்ட அஞ்சல் ஊழியர்கள் தலைமைஅஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுத்தர் சங்கத் தலைவர் ஏ.மைக்கேல்,தபால்காரர் சங்கத் தலைவர் இளங்கோவன், கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கச் செயலாளர் ராமச்சந்திரன் , ஆர்எம்எஸ் ஊழியர் சங்கச் செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். எழுத்தர் சங்கச் செயலாளர் மனோகர் தேவராஜன், மகளிர் அணி அமைப்பாளர் மெரிட்டா, தபால்காரர் சங்கச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

தங்கப்பத்திரம் விற்பனை, ஆதார் அட்டை எடுக்கும் பணி, அஞ்சல் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் காப்பீடு, அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்குவது ஆகியவற்றில் நடைமுறை சாத்தியமற்ற இலக்குகள்நிர்ணயிப்பதை கண்டித்தும், இலக்குகளைநிறைவேற்ற நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கேஷமிட்டனர். இதில் அஞ்சல் ஊழியர் கள் திரளாக கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT