Regional02

தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

தி.மலை மாவட்டம் ஆரணி நகரம் அருணகிரி சத்திரத்தில் வசிப்பவர் விஜயகுமார். இவர்,திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக, செய்யாறு காவல்துறையினர் நேற்று முன் தினம் அழைத்து சென்றுள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், விஜயகுமாரின் மனைவி உஷாராணி(40) மற்றும் மகன் ராகுல்(18) ஆகியோரை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், அவமானமடைந்த இருவரும் பையூர் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று முன் தினம் இரவு குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில், ராகுல் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட உஷாராணி, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT