Regional03

லஞ்ச ஒழிப்பு சோதனையை ஒருங்கிணைத்த 2 எஸ்பிக்கள் :

செய்திப்பிரிவு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கு தொடர்பாக 35 இடங்களில் நடைபெற்ற சோதனையை 2 எஸ்பிக்கள் ஒருங்கிணைத்த தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் வீடுகள் என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். கடந்த 2016 முதல் 2021 வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இதுவரை எந்த அமைச்சரும் சிக்காத நிலையில் 654 சதவீத அளவுக்கு சொத்து சேர்த்திருப்பது இவர் மட்டும் என கூறப்படுகிறது.

எனவே, கே.சி.வீரமணி மீதான வழக்கில் நடைபெற்ற சோதனையை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று சிறப்பு கவனத்துடன் மேற்கொண்டனர் என கூறப்படுகிறது. இந்த சோதனையை லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள் மயில்வாகனன், சண்முகம் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆம்பூரில் இருந்தபடி காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சோதனையை ஒருங்கிணைத்ததுடன் மற்றொரு காவல் கண்காணிப்பாளரான சண்முகம் வேலூரில் இருந்தபடி மற்ற குழுவினரை ஒருங்கிணைத்து செயல்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT