நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் எச்ஐவி, காசநோய் மற்றும் ரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பெ.முருகன் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் அன்புமலர் ரத்ததானம் செய்வதன் அவசியம், தேவை மற்றும் பயன்கள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும், எச்ஐவி எய்ட்ஸ், காசநோய் ஏற்படும் விதம், நோயிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது.
தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் வெஸ்லி, கல்லூரியின் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் ம.சந்திரசேகரன் உட்பட கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.