கடலூர் துறைமுகத்தில் நடைபெறும் விரிவாக்க திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
Regional01

சாகர்மாலா திட்டத்தில் ரூ.135 கோடியில் கடலூர் துறைமுகம் விரிவுபடுத்தும் பணி : அக்டோபருக்குள் பணிகளை முடிக்க ஆட்சியர் அறிவுரை

செய்திப்பிரிவு

கடலூர் துறைமுகத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்பின் மூலம் சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.135 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இப்பணியானது சென்னை இந்திய தொழில் நுட்ப கழகத்தின் (ஐஐடிஎம்) தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகிறது. இதன்படி இரண்டு தளங்கள், அலைக்கரை மற்றும் ஆழமிடுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியத்துவமாக இரண்டு புதிய சரக்கு கடல் தளங்கள் மற்றும் ஆண்டுக்கு 5.68 மெட்ரிக் டன் சரக்கு கையாளும் திறன் கொண்டதாக விரிவாக பணி நடைபெறுகிறது.

இத்திட்டத்தினை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு கடல்சார் வாரிய செயற்பொறியாளர் ரவிபிரசாத், துறைமுக கண்காணிப்பாளர் ஜெபருல்லாகான், கடல்சார் வாரிய அலுவலர்கள், மீன்வளத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT