Regional01

ஓபிஎஸ்-க்கு சபாநாயகர் ஆறுதல் :

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறை வால், கடந்த 1-ம் தேதி காலமானார். நேற்று பெரிய குளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு வந்திருந்த சபாநாயகர் அப்பாவு, அங்கு விஜயலட்சுமியின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ப.ரவீந்திரநாத் எம்பிக்கு அவர் ஆறுதல் கூறினார்.

திமுக தெற்கு, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், தங்க தமிழ்ச் செல்வன், எம்எல்ஏக்கள் மகா ராஜன், சரவணக்குமார் ஆகி யோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT