Regional01

சிவகங்கையில் பொறியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு :

செய்திப்பிரிவு

சிவகங்கை தொண்டி ரோடு ஏஞ்சல் சர்ச் அருகே வசிப்பவர் பழனியப்பன் (45). வெளிநாட்டில் கட்டுமானப் பொறியாளராக உள்ளார். சமீபத்தில் ஊருக்கு திரும்பினார். நேற்று முன்தினம் சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் அன்னதானம் நடந்தது. இதில் பங்கேற்கச் சென்ற பழனியப்பனுக்கும், சிலருக்கும் இடையே வாக் குவாதம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர் பழனியப்பன் வீட்டில் பெட் ரோல் குண்டை வீசிவிட்டுச் சென்றனர்.

ஜன்னல் மீது விழுந்த அந்த குண்டு வெடிக்கவில்லை. இதுகுறித்து நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT