சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (17-ம் தேதி) காணொலி வாயிலாக நடக்கிறது.
இதுதொடர்பாக ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான செப்டம்பர் மாத குறைதீர் கூட்டம் காணொலி வழியாக நாளை (17-ம் தேதி) காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது. விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் வட்டாரத்துக்கு உட்பட்ட வேளாண்மைஉதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சென்று இக்கூட்டத்தில் கலந்துகொள்ளலாம். காலை 10 மணிக்கு தங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், வேளாண் மற்றும் சகோதரத் துறைகள் தொடர்பான தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் மூலமாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களிடம் வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.